கட்டாக்கில் இந்தியா கலக்கல் வெற்றி! : வீணானது பீட்டர்சன் சதம்

நவம்பர் 27, 2008

team_india015
தோனி தலைமையிலான இந்திய அணியின் வெற்றிநடை தொடர் கிறது. கட்டாக்கில் நடந்த ஐந்தாவது ஒருநாள் போட்டியில் சேவக், சச்சின், தோனி ரெய்னா அதிரடி காட்ட, இங்கி லாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன்மூலம் இந்திய அணி தொடர்ந்து 5வது வெற்றியை பெற்று அசத்தியது. இங்கிலாந்து தரப்பில் கேப்டன் பீட்டர் சனின் சதம் வீணானது.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 7 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையா டுகிறது. முதல் நான்கு போட்டியிலும் சூப்பர் ஆட்டத்தை வெளிப் படுத்திய இந்திய அணி தொடரை 4-0 என கைப்பற்றியது. இந்நிலையில் ஐந்தாவது போட்டி, ஒரிசா மாநிலம் கட்டாக்கில் நடந்தது. “டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் தோனி பீல்டிங் தேர்வு செய்தார்.

காம்பிர் நீக்கம்: இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப் பட்டன. காம்பிர், முனாப் படேல் நீக்கப்பட்டு, ஆல்- ரவுண்டர் இர்பான் பதான், ரோகித் சர்மா சேர்க்கப் பட்டனர். இங்கிலாந்து அணியில் பெல், ஆன்டர்சனுக்கு பதிலாக குக், ஹார்மிசன் இடம் பிடித்தனர்.

ஜாகிர் அசத்தல்: துவக்க வீரர்களாக போபரா, குக் வந்தனர். மிகவும் எதிர் பார்க்கப்பட்ட குக் 11 ரன்களுக்கு ஜாகிர் பந்தில் அவுட்டானார். அடுத்து வந்த கேப்டன் பீட்டர்சன் ஆட்டத்தை அதிரடியாக துவக்கினார். இர்பான் பதான் வீசிய 7வது ஓவரில் 2 பவுண்டரி உட்பட மொத்தம் 13 ரன்கள் எடுக்க, ரன்வேகம் எகிறியது. இந்நிலையில் சூப்பராக பந்துவீசிய ஜாகிர், இங்கிலாந்துக்கு இரண்டாவது அதிர்ச்சி கொடுத்தார். இவர் போபராவை (24) வெளியேற்றினார்.

பீட்டர்சன் பிரமாதம்: இந்நிலையில் களமிறங்கிய கோலிங்வுட், பீட்டர்சனுடன் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக விளையாடிய பீட்டர்சன் ஒரு நாள் அரங்கில் 21வது அரைசதம் பதிவு செய்தார். தொடர்ந்து அசத்திய இவர் ஹர்பஜன் பந்தில் ஒரு இமாலய சிக்சர் அடித்து மிரட்டினார். மறுமுனை யில் இவருக்கு கோலிங் வுட் நல்ல ஒத்துழைப்பு தந்தார். இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 89 ரன்கள் எடுத்த நிலையில் கோலிங்வுட் (40) அவுட் டானார். அதிரடி பிளின் டாப் வந்த வேகத்தில் “டக்’ அவுட்டாகி ஏமாற்றினார்.

ஷா அதிரடி: அடுத்து ஓவேஸ் ஷா வந்தார். இஷாந்த் பந்தில் வரிசை யாக இரண்டு பவுண்டரி கள் விளாசி, ஷா அரைசதம் கடந்தார். இங்கிலாந்து அணி 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்தது. பீட்டர்சன் 111 (ஒரு சிக்சர், 10 பவுண்டரி), ஓவேஸ் ஷா 66 ரன்களுடன்(9 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

சேவக் விளாசல்: இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு சேவக், சச்சின் ஜோடி அதிரடி துவக்கம் தந்தது. இங்கிலாந்து பந்துவீச்சை ஒருகை பார்த்தார் சேவக். ஹார்மிசன் வீசிய 5வது ஓவரில் அடுத்தடுத்து மூன்று பவுண்டரிகள் அடித்து அசத்தினார். மறுமுனையில் பிளின்டாப் பந்தில் சச்சின் இரண்டு பவுண்டரிகள் அடிக்க, இந்தியா முதல் 10 ஓவரில் 62 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளாசிய சேவக் சுவான் வீசிய 13வது ஓவரில் ஒரு சிக்சர், மூன்று பவுண்டரி அடித்து, அரைசதம் கடந்தார். இந்த ஓவரில் இந்தியாவுக்கு மொத்தம் 21 ரன்கள் கிடைத்தது.

சச்சின் அரைசதம்: சிறப்பாக விளையாடிய சச்சின் ஒரு நாள் அரங்கில் 90வது அரைசதம் கடந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 136 ரன்கள் எடுத்தநிலையில் சச்சின் அவுட்டானார். இவர் 6 பவுண்டரிகள் உட்பட 50 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த யுவராஜ் (6) விரைவில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். இவரை தொடர்ந்து சிறப் பாக விளையாடி கொண் டிருந்த சேவக்கும் அவுட் டாக, இந்திய அணிக்கு லேசான சிக்கல் ஏற்பட்டது. ஒரு சிக்சர், 15 பவுண்டரி அடித்த சேவக் 73 பந்தில் 91 ரன்கள் எடுத்து, சதம் கடக்கும் வாய்ப்பை 9 ரன்களில் நழுவவிட்டார்.

தோனி “50′: அடுத்து வந்த ரெய்னா, கேப்டன் தோனியுடன் ஜோடி சேர்ந் தார். சூப்பர் ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி அணியை வெற்றி நோக்கி கொண்டு சென்றது. அதிரடியாக விளையாடிய ரெய்னா, போபரா மற்றும் சுவான் ஓவரில் தலா 2 பவுண்டரிகள் விளாசினார். பொறுப்புடன் பேட் செய்த தோனி, சுவான் பந்தில் பவுண்டரி அடித்து அரை சதம் கடந்தார். இது ஒரு நாள் அரங்கில் இவரது 25வது அரைசதமாக அமைந்தது. இந்த ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 94 ரன்கள் எடுத்தநிலையில் தோனி (50) அவுட்டானார்.

ரெய்னா அசத்தல்: சிறப்பாக விளையாடிய ரெய்னா, ஒரு நாள் போட்டிகளில் 8வது அரைசதம் கடந்தார். இந்திய அணி 43.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ரெய்னா 54, ரோகித் 8 ரன்களுடன் ஆட்டமிழக் காமல் இருந்தனர். இவ்விரு அணிகளும் மோதும் 6வது ஒரு நாள் போட்டி வரும் 29ம் தேதி கவுகாத்தியில் நடக்கிறது.

சச்சின் “125″: இங்கிலாந்து வீரர் குக்கை “கேட்ச்’ பிடித்து வெளியேற்றிய சச்சின், ஒரு நாள் போட்டிகளில் 125வது “கேட்ச்’ பிடித்த 6வது வீரர் என்ற சாதனை படைத்தார். முன்னதாக இந்தியாவின் அசார் (156), இலங்கையின் ஜெயவர்தனா (153), ஆஸ்திரேலி யாவின் பாண்டிங் (135), நியூசிலாந்தின் பிளமிங் (132), ஆஸ்திரேலியாவின் பார்டர் (127) ஆகியோர் இம்மைல்கல்லை கடந்துள்ளனர்.

இந்தியா முதலிடம்: நேற்று இங்கிலாந்தை வீழ்த்திய இந்திய அணி இந்தாண்டில் தனது 19வது வெற்றியை ருசித்துள்ளது. இதன்மூலம் இந்தாண்டு அதிக வெற்றிகளை பெற்ற அணி என்ற பெருமையை பாகிஸ்தானிடம்(18) இருந்து தட்டிச் சென்றது. இந்தியா 2008ல் 29 போட்டியில் பங்கேற்று 19 வெற்றி, 8 தோல்விகளை சந்தித்துள்ளது. 2 போட்டியில் முடிவு கிடைக்கவில்லை.

பேட்டிங்கில் ஆதிக்கம்: சேவக் 91 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் இந்தாண்டு ஒரு நாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் மூன்றாவது இடத்தை சகவீரர் யுவராஜுடன்(893) பகிர்ந்து கொண்டார். முதல் இரண்டு இடங்களில் காம்பிர்(1119), தோனி (1097)இருக்கின்றனர். மொத்தத்தில் “டாப்-4′ இடங்களையும் இந்தியா கைப்பற்றி பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்துகிறது.


2-வது டெஸ்ட்:இந்தியா அபாரம்.

ஆகஸ்ட் 2, 2008

இந்தியா-இலங்கை அணிகள் மோதிய 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் நடைபெற்று வரு கிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 329 ரன் எடுத்தது. ஷேவாக் இரட்டை சதம் (201) அடித்தார். மென்டீஸ் 6 விக்கெட்டும், வாஸ், முரளீ தரன் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இலங்கை நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 215 ரன் எடுத்து இருந்தது. கேப்டன் ஜெயவர்த்தனே 46 ரன்னுடனும், பிரசன்ன ஜெயவர்த்தனே 5 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று (சனிக்கிழமை) 3-வது நாள் ஆட்டம் நடந்தது. இருவரும் தொடர்ந்து ஆடினார்கள். ஜெயவர்த்தனே 98 பந்தில் 5 பவுண்டரியுடன் அரை சதத்தை தொட்டார். இலங்கை அணி 73.5-வது ஓவரில் 250 ரன்னை தொட்டது.
ஆனால் அதற்கு அடுத்த ஓவரில் ஹர்பஜன் சிங் இந்த ஜோடியை பிரித்தார். பிரசன்ன ஜெயவர்த்தனே 24 ரன்னில் அவரது பந்தில் லட்சுமணனிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.
அடுத்து வந்த சமிந்தா வாஸ் 1 ரன்னில் கும்ப்ளே பந்தில் `அவுட்’ ஆனார். அப்போது இலங்கை 7 விக்கெட் இழப்புக்கு 251 ரன் என்ற நிலையில் இருந்தது. ஆனால் மறுமுனையில் இருந்த கேப்டன் மகிளா ஜெயவர்த் தனே பொறுப்புடன் ஆடி ரன் சேர்த்தார்.
அவரது விக்கெட்டை கேப்டன் கும்ப்ளே கைப்பற்றி னார். ஜெயவர்த்தனே 188 பந்தில் 10 பவுண்டரியுடன் 86 ரன் எடுத்து ஆட்டம் இழந் தார்.
ஹர்பஜன், கும்ப்ளேயின் அபாரமான சுழற்பந்தில் எஞ்சிய விக்கெட்டுகள் சரிந்தன. இலங்கை அணி 93.3 ஓவரில் 292 ரன்னில் `ஆல் அவுட்’ ஆனது. இது இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 37 ரன் குறைவாகும்.
ஹர்பஜன் சிங் 102 ரன் கொடுத்து 6 விக்கெட்டும், கும்ப்ளே 3 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
மதிய உணவு இடைவேளைக்கு பிறகு 37 ரன்கள் முன்னிலையில் இந்திய அணி 2-வது இன்னிங்சை ஆடியது.
இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய வீரர்கள் சேவாக் காம்பீர் சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தனர். சேவாக் 50 ரன்னும். காம்பீர் 74 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.
தெண்டுல்கர் 31 ரன்னில் அவுட் ஆனார். டிராவிட் நிதானமாக நின்று விளையாடி ரன் சேர்த்தார். டிராவிட் 44 ரன்னில் முரளீதரன் பந்தில் அவுட்டானார். அதன் பின் கங்குலியுடன் லஷ்மண் ஜோடி சேர்ந்தார்.
இந்தியா 56.4 ஓவரில் 200 ரன் எடுத்திருக்கும்போது 3-வது நாள் ஆட்டம் முடிந்தது.

கங்குலி, லஷ்மண் ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் உள்ளனர்.


சேரனின் அநாகரீக பேச்சு காய்ச்சி எடுத்த பாரதிராஜா

ஆகஸ்ட் 1, 2008

ராமன் தேடிய சீதை விழாவில் சேரனின் பேச்சு திரையுலகை சேர்ந்த பலருக்கும் கூட அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பத்திரிகையாளர்களை ‘பாடு’ என்று திட்டிய சேரனின் செய்கை அங்கிருந்த பாராம்பரிய இயக்குனர்களை அதிர்ச்சிக்குள்ளாக்க, விஷயத்தை இயக்குனர்கள் சங்க தலைவர் பாரதிராஜாவுக்கு தெரியப்படுத்தினார்களாம். கடுங்கோபத்திற்குள்ளான ராஜா, சேரனை தொலைபேசியில் அழைத்து கடுமையாக திட்டினாராம். இவரைப்போலவே பல முன்னணி இயக்குனர்களும் சேரனை போனில் காய்ச்ச¤ எடுக்க அதிர்ந்து போன சேரன், தனது கைப்பட மன்னிப்பு கடிதம் எழுதி பத்திரிகையாளர்களுக்கு அனுப்ப முடிவு செய்திருக்கிறாராம்.

கடனை அடைத்துவிட்டு சினிமாவுக்கு முழுக்கு போடப் போவதாக சேரன் பேசியதை பற்றி கருத்து தெரிவித்த கே.பாக்யராஜ், “எனக்கெல்லாம் அடுத்த பிறவி இருந்தால் அப்போதும் சினிமாக்காரனாக பிறக்க வேண்டும் என்றுதான் பிரார்த்திப்பேன். ஆனால், சினிமாவில் இருந்து கொண்டே சினிமா வேண்டாம் என்கிறார் சேரன், ரொம்ப வருத்தமாக இருக்கிறது” என்றார் வேதனையோடு.


ரஜினியின் அடுத்த லட்சியம்

ஜூலை 31, 2008

தன்னை அறிமுகப்படுத்தி ஆளாக்கிய ஆசான் பாலசந்தருக்கு நெருக்கடியில் கைகொடுத்து உதவி செய்தாகிவிட்டது. கையிலிருந்து ஒரு பைசா செலவில்லாமல் படம் தயாரிக்க ஏதுவாக வேறொரு தயாரிப்பாளரைப் பிடித்துக் கொடுத்து குருநாதரின் கைகளில் பல கோடிகள் கைகளில் கிடைக்க ஏற்பாடு செய்தார் ரஜினி.

அடுத்த கடமை ஒன்று பாக்கியிருக்கிறது சூப்பர் ஸ்டாருக்கு. முன்பே கிசுகிசுத்த மாதிரி பிரபல தயாரிப்பாளரும் இயக்குநருமான பஞ்சு அருணாசலத்தையும் கை தூக்கிவிடத் தயாராகி விட்டாராம் சூப்பர் ஸ்டார். குசேலனுக்குக் கொடுத்த மாதிரி 15 நாட்கள் கால்ஷீட் கொடுத்து இந்தக் கடமையையும் முடித்துவிட்டால் நிம்மதியாக ‘ரோபோ’வுக்குப் போய்விடலாம் என்பது அவரது எண்ணமாக இருக்கிறதாம்.

இதற்கிடையில் ‘ரோபோ’ படத்தின் போட்டோ ஷூட் வேலைகளிலும் பிஸியாக இருக்கிறார் சூப்பர் ஸ்டார்.


கேட்டார் ஷாரூக்; உதவினார் ரஜினி!!

ஜூலை 31, 2008

குசேலன் இந்தி டப்பிங் படத்தை இப்போதைக்கு ரிலீஸ் செய்தால் அதே கதையைக் கொண்ட தனது தீபாவளி ரிலீஸ் படமான பில்லூ பார்பர் பாதிக்கப்படும்.
எனவே குசேலன் இந்திப் பதிப்பைத் தாமதமாக ரிலீஸ் செய்யுமாறு ஷாரூக் கான் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனால் இந்தியில் டப் செய்யப்பட்ட குசேலனை இப்போதைக்கு ரிலீஸ் செய்ய வேண்டாம் என்றும், பில்லூ பார்பர் வெளியான பிறகு ரிலீஸ் செய்து கொள்ளுங்கள் என்றும் பிரமிட் சாய்மிரா நிறுவனத்துக்கு அறிவுரை வழங்கியுள்ளார் ரஜினி.

மம்முட்டி நடித்த கதபறயும் போல் படம்தான் தமிழ், தெலுங்கில் ரஜினி நடிக்க குசேலன் (கதாநாயகுடு) மற்றும் இந்தியில் ஷாரூக்கான் நடிக்க பில்லூ பார்பர் என தயாராகிறது.

இதில் குசேலன் படம் வருகிற வெள்ளிக்கிழமை உலகமெங்கும் வெளியாகிறது. இந்தப் படத்தை இந்தியில் டப் செய்து வெளியிடுகிறது பிரமிட் சாய்மிரா. ஆரம்பத்தில் இந்தி டப்பிங்குக்கு எதிர்ப்பு தெரிவித்தார் பில்லூ பார்பர் படத்தின் இயக்குநர் ப்ரியதர்ஷன்.

ஆனால் குசேலனை இந்தியில் டப் செய்துகொள்ள அதன் தயாரிப்பாளரும், கதாசிரியருமான சீனிவாசனிடம் ஏற்கெனவே அனுமதி பெற்றிருந்தார் இயக்குநர் வாசு. எனவே ப்ரியதர்ஷனின் வாதம் எடுபடாமல் போய்விட்டது.

எனவே திட்டமிட்டபடி, குசேலனின் இந்திப் பதிப்பையும் ஒரு சேர ரிலீஸ் செய்துவிட வாசு முடிவெடுத்திருந்தார். சிவாஜி தமிழ்ப் படம் மும்பை, டெல்லி மற்றும் புனே போன்ற நகரங்களில் 40 பிரிண்டுகளுக்கும் மேல் வெளியாகி வசூலில் புதிய சாதனை படைத்தது.

எனவே குசேலனை இந்தியில் டப் செய்து ஒரே நேரத்தில் வெளியிடுவது நல்ல பலனைத் தரும் எனத் திட்டமிட்ட வாசு, டப்பிங் வேலையையும் முடித்துவிட்டார் (ஆனால் இப்படி டப் செய்யப்பட்ட சந்திரமுகி எதிர்பார்த்த மாதிரி போகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது)

ஆனால் இதைக் கேள்விப்பட்ட ஷாரூக்கான் தனிப்பட்ட முறையில் ரஜினியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தன்னுடைய தயாரிப்பில், நடிப்பில் உருவாகும் பில்லூ பார்பர் தீபாவளிக்கு வெளியாவதால், அதற்கு முன் அதே கதையைக் கொண்ட குசேலன் இந்திப் பதிப்பை வெளியிடுவது தன் படத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், இரண்டு படங்களையும் வேண்டுமானால் ஒரே நேரத்தில் வெளியிட்டுக் கொள்ளலாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆனால் குசேலனை நேரடியாக தமிழில் ரிலீஸ் செய்வதால் தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து ஆங்கில சப்-டைட்டில்களுடன் குசேலன் தமிழிலிலேயே வட இந்தியாவெங்கும் ரிலீசாகிறது.

இத்தகவலை பிரமிட் நிறுவன மேலாண்மை இயக்குநர் சாமிநாதனும் உறுதிப்படுத்தியுள்ளார். ரஜினி சொன்னதால், குசேலன் இந்தி டப்பிங்கை நிறுத்தி வைத்திருப்பதாக அவர் கூறினார்.

மீண்டும் திறக்கப்பட்ட அரோரா:

இதற்கிடையே, சில மாதங்களுக்கு முன் இழுத்து மூடப்பட்ட மும்பை அரோரா திரையரங்கம் குசேலன் படத்தைத் திரையிடுவதற்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

ஆண்டு இறுதி வரை மட்டுமே செயல்படவுள்ள இத்திரையரங்கம் குசேலன் ஓடி முடிந்ததும் மீண்டும் மூடப்பட்டு, வணிக வளாகத்துடன் கூடிய, மல்டிபிளக்ஸ்ஸாக மாறப்போகிறது


ரஹ்மானின் புதிய முயற்சி!

ஜூலை 30, 2008

இந்தியத் திரையுலகின் இசை மேதைகளுள் ஒருவரான ஏ.ஆர்.ரஹ்மான் தனது அடுத்த இசைப் பரிசோதனை முயற்சியை ஆரம்பித்துவிட்டார்.
முன்பு வந்தே மாதரத்தை தன் மந்திர இசையால் இளைஞர்களின் தேசிய கீதமாக்கியவர், இப்போது உலகப் பொதுமறையாம் திருக்குறளை ஆல்பமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.இந்த ஆல்பத்தைத் தயாரிக்கப் போகிறவரும் அவரே.

திருக்குறள் ஒரு அற்புதமான இலக்கியம். அதை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டியது நம் கடமை. அதனால்தான் நானும் பிளாஸியும் (பாபா தீம் பாட்டுப் பாடியவர்) இணைந்து இந்த முயற்சியில் இறங்கியுள்ளோம், எனும் ரஹ்மான், இப்போதே வேலைகளைத் துவங்கிவிட்டார்.

ஏற்கெனவே எக்கோ நிறுவனத்தின் ரங்கசாமி பார்த்தசாரதி திருக்குறளுக்கு இசையமைத்துள்ளார்.

இனி, தமிழ்ப் பாடத்தில் திருக்குறளுக்கு மட்டும் பத்துக்குப் பத்து மதிப்பெண்கள் அப்படியே கிடைத்துவிடும் மாணவர்களுக்கு!!

 


கமலின் பிரமிக்க வைக்கும் ஒப்பந்தங்கள்!

ஜூலை 28, 2008

உலக நாயகன் கமல்ஹாசன் அடுத்து எடுக்கப்போகும் மர்மயோகி அவரது சொந்தப் படம் என்றுதான் நிறையப் பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதுதான் இல்லை!
தசாவதாரம் தந்திருக்கும் புதிய தெம்பில், இப்போதைக்கு அப்படி எந்த ரிஸ்க்கையும் எடுக்க விரும்பாத கமல்ஹாசன் புத்திசாலித்தனமாகச் செய்திருக்கும் சில ஒப்பந்தங்களைப் பற்றிய ‘எக்ஸ்க்ளூசிவ்’ தொகுப்புதான் இந்தச் செய்தி!இந்தப் படத்தை முதல்பிரதி அடிப்படையில் எடுக்கிறார் கமல். நாயகனும் அவரே, இயக்குநரும் அவரே என்பது உங்களுக்குத் தெரிந்ததுதான்.  பிரமிட் சாய்மிராதான் இந்தப் படத்தை முதல் பிரதி அடிப்படையில் வாங்கப்போகிறார்கள். சில தினங்களாக இந்தப் படத்தை ரூ.100 கோடி செலவில் எடுக்கப்போவதாகக் கமல் கூறி வருகிறார்.ஆனால் இரு மாதங்களுக்கு முன்பே இந்தப் படத்தின் முதல் பிரதியை ரூ.150 கோடிக்கு விற்றிருக்கிறார் கமல்ஹாசன் (சம்பளம் உள்ளிட்ட செலவுத் தொகை மட்டுமே இந்த முதல் பிரதிக் கணக்கில் சேரும்).

இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ள நிலையில், இப்போது கமல் ரூ.100 கோடி மட்டும்தான் செலவு எனக் கூறி வருவது ஏன் எனத் தெரியாமல் விழிக்கிறது சாய்மிரா நிறுவனம். மீதி ரூ. 50 கோடிக்கு என்ன கணக்கு என கமலிடம் கேட்கவும் இந்நிறுவனம் முடிவு செய்திருப்பதாக நம்பகமான தகவல்கள் கூறுகின்றன.

வெளிப்படையாகப் பார்க்கும்போது, இந்த ஒப்பந்தம் கமல் – சாய்மிராவுக்கிடையே செய்யப்பட்டது போல் தெரிந்தாலும், இதில் சாய்மிராவுக்கே தெரியாத இன்னொரு உள் ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது.

அந்த ஒப்பந்தப்படி கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்துடன் இணைந்து இந்த முதல் பிரதியை தயாரிக்கப்போவது வால்ட் டிஸ்னி நிறுவனம். இந்த உல் ஒப்பந்தப்படி படம் எடுப்பதற்கான முழுத் தொகையையும் வால்ட் டிஸ்னியே வழங்கும். ஒரு நிர்வாகத் தயாரிப்பாளரைப் போல ராஜ்கமல் அதை மர்மயோகிக்குக் கையாளும்.

இதற்குப் பிரதியுபகாரமாக, படத்தின் பப்ளிசிட்டி போஸ்டர்களில், வால்ட் டிஸ்னி-ராஜ்கமல் பிலிம்ஸ் இணைந்து வழங்கும், பிரமிட் சாய்மிரா பெருமையுடன் அளிக்கும், உலக நாயகன் கமல்ஹாசனின் மர்மயோகி – எனப் போட்டுக் கொள்ள அனுமதிக்கப்படும்.

அதாவது தென்மாநில மொழிப் படம் ஒன்றின் மூலம் உள்ளே நுழைய இந்தச் செலவைச் செய்கிறது வால்ட் டிஸ்னி. ஆக, செலவில்லாமல், ஆனால் ஒரு மகா பிரமாண்டமான படத்தைத் தயாரிக்கிறது கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம்.

இந்த புத்திசாலித்தனமான ஒப்பந்தங்கள் அனைத்திலும் கமல்ஹாசனின் மூளையாய் இருந்து செயல்பட்டவர் கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக நாயகன், இப்போ நல்ல தெளிவான் பிஸினஸ் நாயகனாகவும் மாறிவிட்டாருங்கோ!


கிளிநொச்சி இரணைமடுக் குளத்தில் முதலையிடமிருந்து தன் உரிமையாளரைக் காப்பாற்றிய மாடு!

ஜூலை 28, 2008

கிளிநொச்சி இரணைமடுக் குளத்தில் முதலையிடம் பிடிபட்ட இளைஞனை அவரது வளர்ப்பு மாடு காப்பாற்றிய சம்பவமொன்று நடைபெற்றுள்ளது.
தனது கையொன்றினை முதலையிடம் பறிகொடுத்துவிட்டுத் தற்போது கிளிநொச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இரணைமடுவைச் சேர்ந்த 26 வயதுடைய நவநீதன் என்ற இவ்விளைஞன் இச்சம்பவத்தை விபரித்தார்.கடந்த 18ம் திகதி காலை 8.00 மணியளவில் தான் தனது மாட்டை இரணைமடுக் குளத்தில் குளிப்பாட்டிக் கொண்டிருந்ததாகவும்; அப்போது குளத்தில் சிறிது தூரம் தான் நீந்திவிட்டுத் திரும்புகையில் முதலையொன்று தனது கையைக் கவ்வி இழுத்துச்சென்று நீருக்குள் மூழ்கடிக்க முயன்றதாகவும்; அப்போது தான் மாட்டின் கயிற்றை எட்டிப் பிடித்துக்கொள்ள ஆபத்தை உணாந்து கொண்ட மாடு வேகமாகக் குளத்திலிருந்து கரையை நோக்கித் தம்மை இழுத்துச் சென்றதாகவும்; தனது பிடியினை விடாத முதலை கரைவரை வந்து தன்னை இழுக்க மாடு அம்முதலையை தனது கொம்பினால் இடித்தும் கால்களினால் மிதித்தும் போராடித் தம்மைக் காப்பாற்றியதாகவும் அவர் கூறினார்.எனினும் முதலை தன் கையினை முழங்கையுடன் துண்டித்து விட்டதாகவும்; கரைக்கு வந்து சத்தமிட்டு உதவிகோரித் தாம் மருத்துவ மனையில் அனுமதிக்கப்ப்டதாகவும் தனது மாட்டின் உதவியினாலேயே தாம் உயிர் பிழைத்ததாகவும் அவ்விளைஞர் குறிப்பிட்டார்.

முதல் டெஸ்ட் கிரிக்கெட்: இலங்கை இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்னில் அபார வெற்றி

ஜூலை 27, 2008

இந்தியா-இலங்கை அணிகள் மோதிய முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது.இலங்கை அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 600 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. ஜெய வர்த்தனே 136 ரன்னும், சமரவீரா 127 ரன்னும், தில்சான் 125 ரன்னும் (அவுட் இல்லை), வர்னபுரா 115 ரன்னும் எடுத்தனர்.ஜாகீர்கான், இஷாந்த்சர்மா, ஹர்பஜன் சிங் ஆகி யோர் தலா 2 விக்கெட் கைப் பற்றினார்கள்.

பின்னர் முதல் இன் னிங்சை விளையாடிய இந்திய அணி முரளீதரன் பந்து வீச்சில் திணறியது.

நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன் எடுத்திருந்தது. லட்சுமண் 19 ரன்னுடனும், கும்ப்ளே 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. லட்சுமணனும், கேப்டன் கும்ப்ளேயும் தொடர்ந்து ஆடினார்கள். மென்டீஸ், முரளீதரன் பந்து வீச்சில் தொடர்ந்து இந்திய விக்கெட்டுகள் சரிந்தன.

இந்தியாவின் ஸ்கோர் 188 ரன் தொடுவதற்குள் கும்ப்ளே, ஹர்பஜன் சிங், ஜாகீர்கான் ஆட்டம் இழந் தனர். 3-வது நடுவர் முடிவுப் படி கும்ப்ளே `அவுட்’ ஆனார்.

ஒரு முனையில் விக்கெட் விழுந்தாலும் மறுமுனையில் இருந்த லட்சுமண் மட்டும் சிறப்பாக விளையாடி இந்தியா 200 ரன்னுக்கு மேல் தொட காரணமாக இருந்தார்.

இந்திய அணி 72.5 ஓவரில் 223 ரன்னில் `ஆல் அவுட்’ ஆனது. இதனால் `பாலோ ஆன்’ ஆனது. லட்சுமண் கடைசியாக ஆட்டம் இழந் தார். அவர் 56 ரன்கள் எடுத் தார்.

முரளீதரன் 84 ரன் கொடுத்து 5 விக்கெட்டும், மென்டீஸ் 72 ரன் கொடுத்து 4 விக்கெட்டும் கைப்பற்றி னார்கள்.

பின்னர் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி முரளீதரன், மென்டீஸ் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தொடர்ச்சியாக அவுட்டாகினர்.

சேவாக் 13, லஷ்மண் 21, தெண்டுல்கர் 12, டிராவிட் 10, கங்குலி 4, கார்த்திக் 0, கும்ப்ளே 12, ஹர்பஜன் சிங் 15, ஜாகீர்கான் 3 ஆகியோர் குறைந்த ரன்னில் அவுட் ஆகினார்கள். காம்பீர் 43 ரன் எடுத்து அவுட் ஆகினார். இந்தியா 138 ரன்னில் ஆல் அவுட் ஆகியது. இதனால் இலங்கை இன்னிங்ஸ் மற்றும் 239 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 
 

 


வணக்கம் தமிழா!

ஜூலை 27, 2008

Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!

சூரியனின் வணக்கங்கள்.


Follow

Get every new post delivered to your Inbox.