| ராமன் தேடிய சீதை விழாவில் சேரனின் பேச்சு திரையுலகை சேர்ந்த பலருக்கும் கூட அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. |
| பத்திரிகையாளர்களை ‘பாடு’ என்று திட்டிய சேரனின் செய்கை அங்கிருந்த பாராம்பரிய இயக்குனர்களை அதிர்ச்சிக்குள்ளாக்க, விஷயத்தை இயக்குனர்கள் சங்க தலைவர் பாரதிராஜாவுக்கு தெரியப்படுத்தினார்களாம். கடுங்கோபத்திற்குள்ளான ராஜா, சேரனை தொலைபேசியில் அழைத்து கடுமையாக திட்டினாராம். இவரைப்போலவே பல முன்னணி இயக்குனர்களும் சேரனை போனில் காய்ச்ச¤ எடுக்க அதிர்ந்து போன சேரன், தனது கைப்பட மன்னிப்பு கடிதம் எழுதி பத்திரிகையாளர்களுக்கு அனுப்ப முடிவு செய்திருக்கிறாராம்.
கடனை அடைத்துவிட்டு சினிமாவுக்கு முழுக்கு போடப் போவதாக சேரன் பேசியதை பற்றி கருத்து தெரிவித்த கே.பாக்யராஜ், “எனக்கெல்லாம் அடுத்த பிறவி இருந்தால் அப்போதும் சினிமாக்காரனாக பிறக்க வேண்டும் என்றுதான் பிரார்த்திப்பேன். ஆனால், சினிமாவில் இருந்து கொண்டே சினிமா வேண்டாம் என்கிறார் சேரன், ரொம்ப வருத்தமாக இருக்கிறது” என்றார் வேதனையோடு. |
